அது என்ன உத்தரவு?
பிரதமர் மோடி அவர்கள் தனது கட்சி எம்பி-க்களுக்கு ஒரு அதிரடி உத்தரவிட்டுள்ளார், தேசப்பிதா மகாத்மா காந்தி மற்றும் வல்லபாய் பட்டேல் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் அக்டோபர் 2 முதல் 31-ம் தேதிக்குள் பாஜக எம்பி-க்கள் தங்களது தொகுதியில், குறைந்தபட்சம் 150 கிமீ தொலைவுக்காவது பாதயாத்திரை செல்ல வேண்டும் என கூறியுள்ளார்.
அதுவும் பாஜக செல்வாக்கு குறைந்த தொகுதியில் தீவிரமாக இருக்க வேண்டும் என்றுரைத்துள்ளார்..
பாதயாத்திரையின் போது அரசாங்கத்தின் திட்டங்கள்பற்றியும், மகாத்மா காந்தி குறித்து நிகழ்ச்சிகள், சுதந்திர போராட்ட வரலாறு மற்றும் அவரது கொள்கைகள் போன்றவற்றையும், அங்குள்ள மக்களின் குறைகள் ஆகியவற்றையும் கவனமாக கருத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்றும் கூறியுள்ளார்..
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பாஜக தனது இழந்த செல்வாக்கை திரும்ப பெரும் முயற்சியாக இருக்கும் என தகவல்கள் வந்தவண்ணம் உள்ளது..
அதிலும்
மிக முக்கியமாக காந்திய எண்ணங்களை எம்பி-க்கள் மக்களுடன் விவாதிக்க வேண்டும் என்றும், மோடி அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.