அதிகமா
ஆசைப்படுற ஆம்பளையும், அதிகமா கோவப்படுற பொம்பளையும், நல்லா
வாழ்ந்ததா சரித்திரமே
இல்ல
அளவுக்கு
அதிகமாக ஆசைப்படற ஆம்பிளை நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை என்ற வசனத்துக்கு எடுத்துக்காட்டுதான் சரவணபவன் ராஜகோபால் அண்ணாச்சி!
சென்னை:
ஏழு தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு பணம், பேர், புகழ், செல்வாக்குடான் சொகுசாக வாழ்ந்த சரவணபவன் ராஜகோபால் அண்ணாச்சி இப்போது சிறையில்...
அடிமட்டத்தில்
இருந்து மேலே வந்தவர்.
ஜோதிடத்தில்
அதீத நம்பிக்கை உடையவர். இரண்டு மனைவிகள் மற்றும் குடும்பத்தில் சின்ன சின்ன சிக்கல்களுக்கும் குழப்பங்களுக்கும் பஞ்சமில்லை.
தொழில்
வளர்ச்சிக்காகவும் குடும்ப பிரச்சனைகளுக்காகவும் குடும்ப ஜோசியரை அடிக்கடி ஆலோசிப்பார் அண்ணாச்சி.
ஜோசியரோ
ஆலோசனையாவது, "நீங்கள் இளம்பெண்ணை கல்யாணம் செய்தால், உங்கள் ஓட்டல் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. வானளாவிய பணக்காரனாகி விடலாம். பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும்" என்று ஜோசியக்காரர் சொல்லி உள்ளார்.
அந்த
சமயம் அண்ணாச்சிக்கு வயசு 50-க்கு மேல் இருக்கும் நிலையில் இளம்பெண்ணை யார் முன்வந்து கட்டி கொடுப்பார்களோ என்றிருந்தும், தேடுதல் நடத்தப்பட்டது.
இந்த
நேரத்தில் அண்ணாச்சி கண்ணில் பட்டதுதான் தனது ஓட்டலில் வேலை பார்த்த அசிஸ்டென்ட் மேனேஜரின் மகள்தான் களையான முகம்.. மாநிறம்தா, நல்லபடிப்பு.. சாந்தமான குணம்.. லட்சணமான தோற்றம்.ன் கொண்ட ஜீவஜோதி.
கண்டதும்
ஜீவஜோதியின் அழகில் மயங்கினார் அண்ணாச்சி. அப்போதுதான் ஜீவஜோதியின் ஜாதகத்தை ஜோசியரிடம் அண்ணாச்சி கொடுக்க, ஜாதகமும் செம பொருத்தமானது
உடனே
மேனேஜரிடமே பெண் கேட்டார். ஆனால் மகளை கட்டிக் கொடுக்க விரும்பவில்லை. இருப்பினும் அண்ணாச்சி சில சொத்துக்களை தருவதாகவும் பணத்தாசை காட்டினார்,
அப்போதும்
ஜீவஜோதியின் தகப்பனார் மசியவில்லை. தொடர் முயற்சியில் இறுதியில் பெண்ணை கட்டி தர சம்மதம் சொன்னார்
அண்ணாச்சிக்கே தனது மகளை மணமுடிக்க ஒப்புக்கொண்டார்.
ஆனால்
ஜீவஜோதி, பிரின்ஸ் சாந்தகுமார் இருவரும்
ஏற்கனவே காதல் பறவைகளாய் சுற்றி திரிந்தவர்கள்.
அதனை
அண்ணாச்சியிடம் சொல்லியும் புரோஜனம் இல்லை, அனைத்து விசயங்களும் தெரிந்தும், மகளை வற்புறுத்தினார் அப்பா. உறுதியான காதல்முன் அப்பாவின் பேச்சு எடுபடவில்லை.
இறுதியில்
பிரின்சுடன் ஜீவஜோதிக்கு கல்யாணம் ஆனது. இருப்பினும் அண்ணாச்சிக்கு ஜீவஜோதியை விட மனசில்லை. ஆசை யாரைத்தான் விட்டது?
ஜீவஜோதியின்
மாப்பிள்ளை பிரின்சை தனியாக அழைத்து, மனைவியை தன்னிடம் தந்துவிடுமாறு கேட்டார். ஆத்திரப்பட்ட பிரின்ஸ், அண்ணாச்சியின் பணிவு + மிரட்டல் பேச்சுக்கு சம்மதிக்கவே இல்லை. அதன் விளைவே பிரின்ஸை கடத்தி கொண்டுபோனார் அண்ணாச்சி.
கடத்திக்கொண்டு
காரில் செல்லும்போதே சாந்தகுமார் கழுத்து நெறிக்கப்பட்டது உயிர் பாதி போனதாக தெரிகிறது .. கொடைக்கானல் மலை உச்சிக்கு செல்வதற்குள் சித்ரவதைகள் பல தொடர்ந்தன..இறுதியாக
மலை உச்சியில் இருந்து தூக்கி வீசப்பட்டார் சாந்தகுமார்.
ஐந்து
நாள் கழித்து மலையடிவாரத்தில் பிணத்தை கைப்பற்றும் நிலை வந்தது.
அதன்பின்னே
அண்ணாச்சியின் இன்னொரு முகம் அம்பலமானது..
ஆரம்ப
காலத்தில், அடிமட்டத்திலிருந்து இமாலய வளர்ச்சியடைந்த அண்ணாச்சி அதன்பின்னே முழு குணமும் வெளிப்பட்டது.
பணமிருந்தால்
எதுவும் செய்யலாம் உணர்ச்சிகளுக்கு அணைத்தேவையில்லை என்று எதனையும் கட்டுப்படுத்த தனது மொத்த வாழ்க்கையையும் ஐம்பது வயதில் வந்த சபலத்தாலும், பேராசையாலும் தொலைத்தே விட்டார்.
மண்ணு,
பொண்ணு இரண்டு பின்னும் போனவர் நிலை என்னவாகும் என்பதற்கு அண்ணாச்சியே ஆகச்சிறந்த உதாரணம்.