குஜராத் மாநிலத்தில் பெய்த கனமழையால் பெரும் வெள்ளத்தில் சிக்கிய மோர்பி மாவட்டத்தில் கல்யாண்பார் கிராமத்தில்(Kalyanpar) மீட்புப்பணியின்போது பிருத்விராஜ் ஜடேஜா(Pruthviraj Jadeja) என்ற இளம் குஜராத் காவலர் அங்கு வெள்ளம் சூழ்ந்து வெளியேற முடியாமல் தத்தளித்த இரண்டு பெண் குழந்தைகளை தனது தோள்களில் தூக்கிக் கொண்டு சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் வெள்ளநீரில் நடந்து சென்று பாதுகாப்பான இடத்தில சேர்த்தார்..
இந்த சம்பவம் அங்குள்ள இளைஞர் ஒருவரால் தற்செயலாக வீடியோ பதிவு எடுக்கப்பட்டது எனினும் பிருத்விராஜ் அவரின் இரக்ககுணம், மற்றும் துணிச்சலை இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது ..