உத்திரபிரதேசத்தில் பிரதமர் மோடி அவர்களின் சொந்த தொகுதியான வாரணாசியில் உள்ள முஸ்லீம் பெண்கள் பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு அனுப்பியுள்ளனர்
காரணம்
முத்தலாக் முறையை ரத்து செய்யும் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதற்காக, நன்றி தெரிவிக்கும் விதமாக பெண்கள் தங்கள் சகோதரர்களுக்காக கொண்டாடும் இந்த ரக்சா பந்தன் விழாவில், பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறுகளை தாங்களே செய்து அனுப்பியுள்ளனர்.
இது குறித்து ராம்பூரா பகுதியை சேர்ந்த ஹியுமா பனோ என்ற பெண் கூறுகையில், பாரத பிரதமர் மோடியால் தான் முத்தலாக் முறை ரத்து செய்யப்பட்டது. அவர், நாட்டில் உள்ள முஸ்லிம் பெண்களுக்கு மட்டுமல்ல அனைத்து பெண்களுக்கும் மூத்த சகோதரர் போன்றவர். எனவேதான் எங்கள் சகோதரருக்கு ராக்கி கயிறு அனுப்பினோம் என்று கூறினார்.
ஆனால், இந்த நிகழ்வை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் திரு மதின் கான் அவர்கள் இதனை மறுத்துள்ளார்.