நீட் பயிற்சி மையங்களில் தீவிர சோதனை- Nixs.in News Tamil |
சி.பி.சி.ஐ.டி நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் விவரங்களை உடனடியாக சமர்ப்பிக்கவேண்டும் வேண்டும் என்று நீட் தேர்வு பயிற்சி மையங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டதாக புகார் எழுந்ததை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி தீவிர விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் தேனி மருத்துவ கல்லூரியில் உதித் சூர்யா என்கிற மாணவர் மோசடி செய்தது தெரியவந்தது. நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதைத்தொடர்ந்து உதித் சூர்யா மற்றும் அவரது பெற்றோரையும் கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது
இதனால் மருத்துவ கல்லூரி இயக்குனரகம் அனைத்து மருத்துவ கல்லூரியிலும் நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவர்களின் ஆவணங்களை சரிபார்க்குமாறு உத்தரவிட்டிருந்தது.
இந்த மோசடி சம்பவத்தில் மேலும் பல மாணவர்கள் ஈடுபட்டிருக்க கூடும் என சந்தேகம் நிலவுவதால் தீவிர விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.இதனால் சி.பி.சி.ஐ.டி மற்றும்
நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமைக்கு (என்.டி.ஏ.), சி.பி.சி.ஐ.டி. தமிழகத்தில் இருக்கும் அனைத்து நீட் தேர்வு மையங்களுக்கும் நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் ஆவணங்களை சரிபார்த்து உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது.