இந்தத் நிலையில் பெரும்பான்மை அமைச்சர்கள் நாங்குநேரி தொகுதியில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதில் பால்வளத்துறை அமைச்சரான ராஜேந்திர பாலாஜிக்கு களக்காடு ஒன்றிய வார்டுகளில் இருக்கிறார்.
களக்காடு ஒன்றியம் கேசவனேரி கிராமப் பகுதியை சேர்ந்த முகமது ஷெரிப் என்கிற ஃபைசல் உள்ளிட்ட சில மக்கள், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை சந்தித்து தங்கள் பகுதியில் ரேஷன் கடை அமைத்துத் தருமாறு மனு அளிக்கச் சென்றுள்ளனர். இங்கு தான் ஆரம்பித்தது பிரச்சனை.
மனு அளிக்கச் சென்ற களக்காடு ஒன்றியம் கேசவனேரி கிராமப் பகுதியை சேர்ந்த மக்களிடம் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாய மக்களையும் அவமதிக்கும் வகையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார் என்று சொல்லப்படுகிறது
மேலும்
இலாமிய மக்களையும் காஷ்மீரத்தில் நடந்தது போல செய்துவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளார். அதற்கு, தமிழகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமிய சமுதாயத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்ததுடன், போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் அப்துர் ரஹ்மான் கூறுகையில், இஸ்லாமிய சகோதரர்கள் பலர் செல்வி ஜெயலலிதா பொதுச்செயலாளராக இருந்த அ.தி.மு.க-வுக்கு மற்றும் அவர்கள் அமைச்சர்கள் பலருக்கு ஆதரவாக வாக்களித்து வெற்றிபெறச் செய்திருக்கிறார்கள்.
ஆனால் தற்போது அதே கட்சியின் அமைச்சர் இவ்வாறு மத்திய அரசை/அவர்கள் செய்வதையும் பறைசாற்றும் விதத்தில் பேசுவது மிகுந்த மன வரு்தத்தை ஏற்படுத்துகிறது என்றும் இதற்கான விளைவுகளை விரைவில் மக்கள் உணர்துவர்கள் என்றும் கூறினார்.