சென்னை:
சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ்.
மருத்துவக்கல்லூரியில்
டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி
மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் 28ஆவது பட்டமளிப்பு விழாவில் இன்று
முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு
வருகை தந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களுக்கு கல்லூரி சார்பில் செண்டை மேளங்கள், நாதஸ்வரம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியாவின்
சிறந்த தொழில்துறை மாநிலமாகத் தமிழ்நாட்டை முன்னேற்றியதற்கும், வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நிய முதலீடுகள் பல ஈர்த்ததற்காகவும் முதலமைச்சர் எடப்பாடி
பழனிசாமிக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
பின்பு
டாக்டர் பட்டம் முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இத்தகைய பட்டம் பெற்றுள்ளதால் தன்னுடைய பொறுப்புகள் மட்டுமே மேலும் கூடியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த
விழாவிற்கு அந்த கல்வி நிறுவனத்தின் நிறுவனர் திரு ஏ.சி.சண்முகம்
தலைமை தாங்கினார், விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, பழனியப்பன், செங்கோட்டையன் முதலானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக
விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, "இந்த கவுரவ டாக்டர் பட்டம் பெற்றது பெருமையளிக்கக்கூடியதாக இருப்பினும் என்னுடைய பொறுப்புகள் மேலும் அதிகமாகியுள்ளன" என்றும் "மாணவர்கள் ஏட்டுக்கல்வியுடன் சேர்த்து,
வாழ்வியல் கல்வி, கலைகளையையும் கற்க வேண்டும். ஏனெனில்ஏட்டுக்கல்வி மட்டுமே எப்போதும் உதவாப்போவதில்லை" என்றும், "மத்திய அரசிடம் புதியதாக 6 மாவட்டங்களில்
மருத்துவக் கல்லூரிகள் தொடங்க வலியுறுத்திஉள்ளதாகவும்"
உரையாற்றினார்.
மேலும்
தமிழ்நாட்டின் புதிய திட்டங்களையம் அரசின் செயல்பாடையும் அந்த மேடையில் பட்டியலிட்டர்.