நாளை தமிழகத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு


தமிழகத்தின் நாளை 27 மாவட்டங்களில் 156 ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
tn-local-body-elections-first-phast-poll-to-go-to-tomorrow
tn-local-body-elections-first-phast-poll-to-go-to-tomorrow

டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு  இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் முதற்கட்டமாக ஒரு கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
156 ஊராட்சி உறுப்பினர் பதவியிடங்களுக்கும்
2,546 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்
4,700 ஊராட்சித் தலைவர் மற்றும்
37,830 ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவியிடங்களுக்கும் நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதற்காக 24,680 வாக்குச்சாவடிகள், 702 தேர்தல் அலுவலர்கள், 13,062 உதவித் தேர்தல் அலுவலர்கள் ஆகியோர் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஒரு வாக்குச்சாவடிக்கு 7 அல்லது 8 அலுவலர்கள் வீதம் சுமார் 4 லட்சத்து 2 ஆயிரம் அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாக்காளர்கள் வாக்களிக்கும் வாக்குச்சாவடிகளை தயார்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன.
Advertising
Advertising


தமிழ்நாடு செய்திகள்












இந்திய செய்திகள்


அரசியல் செய்திகள்


விளையாட்டு செய்திகள்




வேலைவாய்ப்பு செய்திகள்







OUR ANDROID APP DETAILS

Copyright © 2021 Nixs News தமிழ்