கலைமாமணி பரவை முனியம்மா காலமானார்
மதுரை: தமிழ் திரைப்பட உலகில் நாட்டுப்புற மற்றும் பின்னணி பாடகியாகவும் குணச்சித்திர வேடங்களில் நடித்துவந்த பரவை முனியம்மா இன்று முதுமை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.இவருக்கு வயது 76.
கடந்த 2003ம் ஆண்டு வெளிவந்த தூள் படத்தின் வாயிலாக திரையுலகிற்கு வந்த இவர் அந்த படத்தில் வரும் சிங்கம் போல.. பாடல் மூலம் அனைவராலும் மிகவும் விரும்பப்பட்டார். மேலும் இவர் தமிழ், மலையாளம் படங்களிலும் 2014ம் ஆண்டு வெளிவந்த சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மான் கராத்தே உள்ளிட்ட 34 திரைப்படங்களில் நடித்திருந்தார். இறுதியாக இவர் 2017ம் ஆண்டு சதுர அடி3500 என்ற படத்தில் நடித்தார். தனது நாட்டுப்புறப் பாடல்களாலும் தனது கிராமிய பேச்சாலும் ரசிகர்களை கவர்ந்தவர் பரவை முனியம்மா.
மேலும் 2000க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் தன் பாடல் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்துள்ளார். இவரது கலைச் சேவையை பாராட்டி தமிழக அரசு இவருக்கு கலைமாமணி பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.
கலைமாமணி பரவை முனியம்மா காலமானார் |