ஐகோர்ட்டில் வீடியோ கான்பிரன்ஸிங் முறையில் வழக்கு விசாரணை
|
ஐகோர்ட்டில் வீடியோ கான்பிரன்ஸிங் முறையில் வழக்கு விசாரணை |
சென்னை:
தமிழ்நாட்டில் கொரோனவால் பிறப்பித்த ஊரடங்கு உத்தரவு காலம் முடியும் வரை வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் மட்டுமே அதுவும் அவசர வழக்குக்கான விசாரணை மட்டும் நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றம் உத்தரவு:
இதற்க்கு முன்பு நாடு முழுவதும் நீதிமன்றங்களில் வழக்கறிஞா்களும், தேவைப்படும் மனுதாரா்களும் மட்டும் விசாரணையின்போது இருக்கும்படி அறிவுறுத்தியது இந்நிலையில் கொரோனா தீவிரம் அதிகரிக்கவே சமூக இடைவெளியை அவசியம் பின்பற்ற வேண்டும் என்றும் வழக்கமான விசாரணையின்போது கூடுவது போல் கூட்டம் போட வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வீடியோ கான்பிரன்ஸிங் முறை:
அதன்படி, மார்ச் மாதம் முதல் ஊரடங்கு காலத்தின்போது காணொலிக் காட்சி வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் அதுவும் மிகவும் அவசரமான வழக்குகளை மட்டும் விசாரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை மேலும் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறையாத நிலையில், மே 3ம் தேதி வரை வீடியோ கான்பிரன்ஸிங் முறை மூலம் மட்டுமே விசாரணை தொடரும் என்று கூறப்படுகிறது.