ஊரடங்கு தளர்வு வழிமுறைகள்: மத்திய அரசு வெளியீடு
ஊரடங்கு தளர்வு வழிமுறைகள்: மத்திய அரசு வெளியீடு |
புதுடில்லி:
கொரோனாவால் ஊரடங்கு இரண்டாவது முறையாக மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் கடைபிடிக்க வேண்டியவை என்னவென்றும் மற்றும் ஏப்ரல் 20 ம் தேதிக்கு பின்னர் சில சேவைதாரர்களுக்கு தளர்வுகளுக்கான வழிமுறைகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மற்ற நாடுகளைபோல இந்தியாவிலும் நாடு முழுவதும் 2ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கின் போது என்னென்ன வழிமுறைகளை மேற்கொள்ளப்படும் என்ற வழிமுறையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வு வழிமுறைகள்: மத்திய அரசு வெளியீடு |
அதன் விவரம் வருமாறு:
தடை தொடரும்:
பின்வரும் சேவைகளின் தடை மே 3 வரை தொடரும்:
* போக்குவரத்து சேவைகள் (பேருந்து, ரயில், விமானம்) அனைத்தும்.* திரையரங்குகள், வணிக வளாகங்கள், அரசியல் நிகழ்வுகள், வழிபாட்டுத்தலங்கள், பொதுக்கூட்டங்கள்.
* அனைத்து கல்வி நிறுவனங்கள்.
* இறுதிச்சடங்கில் பங்கேற்க அதிகபட்சமாக 20 பேர்.
* மத நிகழ்வுகளுக்கு தடை.
* மருத்துவ மற்றும் அத்தியாவசிய தேவைக்களுக்காக செல்பவர்களுக்கு மட்டும் அனுமதி.
* தொற்று அதிகமுள்ள பகுதிகள், கட்டுப்படுத்துதல் பகுதியாக மாற்றி சீல்வைக்கப்படும்.
* மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்துக்கு தடை.
* தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள உணவங்கள், மெக்கானிக் கடைகள் இயங்க அனுமதி.
தடை தளர்வு:
பின்வரும் சேவைகளின் தடை ஏப்.,20 முதல் தளர்த்தப்படும்: (ஆனால் மாஸ்க் அணிவது கட்டாயம்)
*கட்டுமான பணி.
* சிறப்பு பொருளாதார மண்டலங்களில் தொழிற்சாலைகள்.
* சிறு, குறு தொழிலில் ஈடுபடுவோர் பணிகள்.
* ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள் வேலைக்கு செல்லலாம்.
* மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், பழக்கடைகள், பால் நிலையங்கள், இறைச்சிக்கடைகள்.
* விவசாயம், தோட்டக்கலை, பண்ணைத் தொழில், விளைபொருள் கொள்முதல்.
* ஐடி நிறுவனங்கள் அதனை சார்ந்த நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் அனுமதி.
* மக்கள் நெருக்கம் குறைவான பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் இயங்கலாம்
* அரசு நடவடிக்கைகளுக்கான கால் சென்டர் மையங்கள் திறக்கலாம்
* ராணுவ வீரர்கள் பயணிக்க, மருந்து பொருட்கள், மருந்து உபகரணங்கள் கொண்டு செல்ல மட்டும் ரயில்கள் இயக்கப்படும்.
* பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது.
* உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள்.
*ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள்.
*கொரியர் நிறுவனங்கள், கேபிள், டிடிஎச் சேவைகள்