புதுடில்லி:
டில்லியில் யமுனை நதி அருகே பார்க்கவே கவலை கவலையளிக்கும் வகையில், பசிக்கொடுமை தாங்காமல் மயானத்தில் கிடந்த அழுகிப்போனவற்றை வெளிமாநில தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக எடுத்து பசியாற்றும் வீடியோ வைரலாகி வருகிறது.Migrants Pick Bananas Trashed Near Delhi Cremation Ground |
ஊரடங்கு:
ஏற்கனவே இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக மே.3 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 20-ம்தேதிக்கு பின்னர் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.வாழ்வாதாரத்தை இழந்தவர்கள்:
இந்த ஊரடங்கால் தலைநகர் டில்லயில் மாட்டிக்கொண்டுள்ள வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, அடுத்த வேலை சாப்பாட்டிற்கும் வழியில்லாமல் சொந்த ஊர் திரும்ப முடியாமல் உள்ளனர். இவர்கள் தற்போது அரசின் உதவிகளையே முழுவதுமாக எதிர்பார்த்துள்ளனர்.அரசின் உதவி இல்லை:
இந்நிலையில் தலைநகர் டில்லயில் அரசின் உதவி சரிவர கிடைக்காத இவர்கள் பசிக்கொடுமை தாங்காமல் இருந்துவந்துள்ளனர்... வேலை செய்து சாப்பிடவும் வழியில்லை...Source: NDTV
மயானத்தில் சாப்பாடு:
இந்த நிலையில் பாசியாய் வாடிய வெளி மாநில தொழிலாளர்கள், புதுடில்லி யமுனை நதிக்கரையோரம் நிகாம்போத் என்ற இடத்தில் உள்ள மயானத்தில் இறந்தவர்களுக்கு இறுதிசடங்கின்போது பயன்படுத்தப்பட்ட வாழைப்பழங்கள் குப்பையிலிருந்து எடுத்து உண்ணும் காட்சி இணையத்தில் பரவி வருகிறது.மயான குப்பையில் இருந்த வாழைப்பழங்கள் சில வெயில் காரணமாக அழுகி போயிருந்தன. அதனையும் வெளி மாநில தொழிலாளர்கள் சிலர் பொருக்கி எடுத்து சாப்பிட்டனர். சிலர் கோணிப்பையில் கொண்டு சென்றனர். இந்த வேதனைக்குரிய புகைப்படம் மற்றும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.