சீனாவில் உருவாக்கப்பட்டதுதான் கொரோனா: நோபல் பரிசு பெற்ற அறிஞர் அதிர்ச்சித் தகவல்
சீனாவில் உருவாக்கப்பட்டதுதான் கொரோனா: நோபல் பரிசு பெற்ற அறிஞர் அதிர்ச்சித் தகவல் |
லண்டன்,
இன்று உலகையே அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரஸ் இயற்கையாகவே நுண்குரு மாறுபாடு அடைந்து காட்டு விலங்குகள் மூலமாக பரவியதா அல்லது மனிதர்களால் உருவாக்கப்பட்டதா? என்ற பல்வேறு சந்தேகங்கள் அனைவரின் மனதிலும் எழுந்த வண்ணம் உள்ளது.சீனாவின் கூற்று:
இதற்கிடையில் சீனாவின் மத்திய நகரமான உகானில் ஒரு பகுதியில் உள்ள கடல்வாழ் மற்றும் பல்வகை உயிரின விற்பனை சந்தையில் இருந்து உருவானது என்று நீண்ட காலமாக சீனா கூறியது. இதனால் அந்த சந்தை பற்றி விளியுலகிற்கு தெரிந்ததை தொடர்ந்து இன்றுவரை மூடப்பட்டுஉள்ளது.அறிஞர் லூக் மோன்தக்னேர்
இன்று உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா ஒரு சீன தயாரிப்பு என்றும் சீனாவில் உகான் நகரில் உள்ள வைராலஜி இன்ஸ்டிடியூட்டின் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டது. அது அங்கிருந்து தப்பித்து வந்துள்ளது என, பிரபல நோபல் பரிசு பெற்ற நுண்கிருமி ஆய்வு அறிஞர் லூக் மோன்தக்னேர் தெரிவித்துள்ளார். இவர் ஏற்கனவே 'எய்ட்ஸ்' நோயைக் கண்டுபிடித்ததற்காக, 2008ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர், தெரிவித்துள்ளதாவது:மேலும் அவர் "உகான் தேசிய பயோ சேப்டி ஆய்வுக்கூடத்தில் எதேர்ச்சியாக நிகழ்ந்த விபத்தின் காரணமாகவே கொரோனா வெளியுலகிற்கு பரவியிருப்பதாகவும் இரண்டாயிரமாண்டு ஆரம்பம் முதலே சீனா இத்தகைய கொரோனா வைரசுகளை ஆராய்ந்து வருகிறது" எனவும் தெரிவித்துள்ளார்.