குரங்காட்டம் நடத்துகிறார் மோடி - திருமாவளவன் கடும் பாய்ச்சல்


குரங்காட்டம் நடத்துகிறார் மோடி - திருமாவளவன் கடும் பாய்ச்சல்
சென்னை: நாட்டு மக்கள் பெரும் அச்சத்தில் இருக்க பிரதமர் மூடி "கொரோனாவின் பெயரால் குடிமக்களை குட்டிக்கரணம் போடச்சொல்லி 'குரங்காட்டம்' நடத்துகிறார்" என்றும் மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொண்டால் தான் உண்டு இதனை சொல்லாமல் மட்டவற்றை செய்து என்ன பயன் என்றும் திருமாவளவன் கறாராக தெரிவித்துள்ளார்.

விளக்கு ஏற்றுதல்: பிரதமர் நரேந்திர மோடியின் #தீபம்_ ஏற்றுவோம் அறிவிப்புக்கு ஏராளமான தலைவர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தற்போதைய நாட்டு மக்கள் இருக்கும் நிலையில் ஏதேனும் புதிய திட்டத்திற்கான அறிவிப்புகள் வரும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரதமரின் அறிவிப்பு ஏமாற்றத்தை தந்ததாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை: "நாடு முழுவதுமான முழு அடைப்பு பத்து நாட்களை எட்டியுள்ள நிலையில், நாட்டின் பிரதமர் ஏதோ அறிவிப்பை வெளியிடப் போகிறார் என்றதும் முக்கியமான செய்திகள் அதில் இருக்கும் என்ற எதிர்பார்ப்போடு மக்கள் காத்திருந்தனர். ஆனால், ஏப்ரல் 5, ஞாயிறு அன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு 'டார்ச் லைட்டை' அடியுங்கள் என்று பிரதமர் அறிவிப்பு செய்துள்ளார்.

இப்படிப்பட்ட அறிவிப்பினால் நாட்டு மக்களுக்கு வைரஸ் தொற்றிலிருந்து மக்களுக்குப் பாதுகாப்பு கிடைக்குமா? இல்லை 21 நாள் அடைப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு நிவாரணம் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பிரதமர்தான் பதிலளிக்க வேண்டும்." என கூறியுள்ளார்.
Advertising
Advertising


தமிழ்நாடு செய்திகள்












இந்திய செய்திகள்


அரசியல் செய்திகள்


விளையாட்டு செய்திகள்




வேலைவாய்ப்பு செய்திகள்







OUR ANDROID APP DETAILS

Copyright © 2021 Nixs News தமிழ்