எப்போது குறையும்; 'கொரோனா' பற்றி ஜோதிட சிறுவன் முன்கூட்டியே கணித்த கணிப்பு |
இந்தியா: இந்தியாவை சேர்ந்த அபிக்யா ஆனந்த் (வயது 14) சிறுவன் எட்டு மாதங்களுக்கு முன்பே கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து, அதனால் என்னென்ன நிகழும் என்றும் கணித்தது, அதுதொடர்பாக விடியோக்கள் இணையத்தில் பரவியது... இந்நிலையில் கொரோனா தொற்று, மே, 29ல் முடிவுக்கு வரும் என அந்த சிறுவன் தெரிவித்துள்ளான்.
சிறுவயது: சிறுவயதுமுதலே ஆனந்த். ஜோதிடம், வானவியல் சாஸ்திரம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்று தனித்திறமையுடன் வலம்வந்தவர் மேலும் அதற்காக பல்வேறு பதக்கங்களையும், விருதுகளையும் பெற்றுள்ளார்.
கொரோனா கணிப்பு: ஆனந்த் தனது ஜோதிட பிரசாங்கத்தையும், அறிவையும் தன்னால் முடிந்தஅளவில் இணையம் வாயிலாக காணொளிமூலம் பரப்பிவந்துள்ளார்.. இந்நிலையில் கடந்த, ஆகஸ்ட் மாதம், ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், 2019 ஆகஸ்ட் முதல், 2020 ஏப்ரல் வரை, உலகை மிகப்பெரிய நோய் அச்சுறுத்தும் என்பதை, கணித்து கூறினார்.
அதில் பதிவிட்டவை, "மிகவும் அரிதாக, செவ்வாய், குரு, சனி, ராகு, சந்திரன் ஆகியவை, சூரிய குடும்பத்தின் வெளி வளையத்தில், ஒரே நேர்கோட்டில் வருகின்றன. இம்மூன்று கிரகங்களும் ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் சக்தி வாய்ந்தவையாக கருதப்படுகின்றன.
அப்படி இருக்க இந்த கிரகங்கள் இணைவதால், அதிகமான கதிர்வீச்சு, பூமியை தாக்கும். அதேநேரம் சந்திரனும், ராகுவும் இணைவதும், சக்தி வாய்ந்ததாகும். ராகு, உலகில் நோய்களை பரப்பும்" என, ஆனந்த் கணித்து கூறினார்.
அவர் கணித்தபடியே விஞ்ஞானிகளையும் கலங்கடிக்கும் வகையில் பூமியின் வெப்பமயமாதல் காரணமாக பனிப்பாறைகள் உருகுவது பன்மடங்கு அதிகமானத்தையும், சீனாவிலிருந்து முற்றிலும் மக்களின் அஜாக்கிரதையால் உலகிற்கு பரவிய கொடிய கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருவதையும் நம்மால் கண்முன்னே காணமுடிகிறது.
ஆனந்த், அவர் பதிவிட்ட வீடியோவில் "மனிதனுக்கும் கண்ணுக்கே தெரியாத வைரசுக்கும் இடையே நடக்கும் ஒரு போர்" என்று இந்த கொரோனா வைரஸ்சை சித்தரித்துள்ளார்.
மேலும் இந்த வைரசானது உலகளவில் ஏப்ரல் மாத இறுதியில் குறையும் என்றும் மே மாதஇறுதிக்கு மேல் இதன் போக்கு கட்டுக்குள் வரும் என்றும் கூறியுள்ளார்.