திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விரைவில் தரிசனம் தொடக்கம்!
திருப்பதி:
கொரோன ஊரடங்கு காரணமாக திருப்பதியில் இதுவரை கோவில் நடை சாத்தப்பட்டு இருந்தது இதனால் சுமார் 400 கொடிவரை வருமான இழப்பு ஏற்பட்துள்ளது என ஏற்கனவே தேவஸ்தானம் தெரிவித்திருந்தது இதனையடுத்து தற்போது திருப்பதி கோவிலில் பக்தர்களை தரிசனம் செய்ய மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து அனுமதி கிடைத்தால், திருப்பதி ஏழுமலையான் கோவில் உட்பட தேவஸ்தானத்திற்கு சொந்தமான அனைத்து கோவில்களையும் திறந்து சாமி தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதிக்க தேவையான ஏற்பாடுகளில் தேவஸ்தான நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.கோவில்களை திறந்தாலும் பக்தர்களிடையே சமூக இடைவெளியை கடைப்பிடிக்க தேவையான ஏற்பாடுகள், கொரோனா கட்டம் தீரும் வரைகோவிலில் தினமும் 14 மணி நேரம் பக்தர்கள் சாமி கும்பிட அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.