4 ம் கட்ட ஊரடங்கு; நிபந்தகள், தளர்வுகள் எவை : மத்திய, மாநில அரசு |
புதுடில்லி:
ஊரடங்கின்போது கொரோன பச்சை மண்டலங்களில் பொருளாதார நடவடிக்கைகளுக்கு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கப்படும் என மத்திய உள்ளதுறை அமைச்சகம் வெளியிட்டுள்ள மேலும் 4-ம் கட்ட ஊரடங்கு மற்றும் அதன் வழிகாட்டுதல் நெறி முறைகளில் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு அறிவித்து உள்ள நாடு முழுவதுமான 3-ம் கட்ட ஊரடங்கு நேற்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்த நிலையில் வரும் மேமாதம் 31ம் தேதி பொது முடக்கத்தை நீட்டிப்பு செய்துள்ளது 4-ம் கட்ட ஊரடங்கிற்கான வழிகாட்டுநெறிமுறைகளை மத்திய அரசின் உள் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அனைத்து பொது இடங்களிலும் பணி இடங்களிலும் முக கவசம் அணிவது கட்டாயம் என்று மத்திய அரசின் உள் துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது... மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள் தான் தொடரும்.
தடை தொடரும்
ஹோட்டல்கள், மது பான கூடங்கள் (அமர்ந்து சாப்பிட தடை).
பார்வையாளர்கள் இன்றி விளையாட்டு அரங்கை திறக்க அனுமதி.
உடற்பயிற்சி கூடங்கள்.
இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மக்கள் வெளியே வர கூடாது (அத்தியாவசிய தேவை தவிர)
அனுமதிக்கப்பட்ட கடைகளில் 5 நபர்களுக்கு மேல் கூட தடை.
வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மதம் சார்ந்த இடங்கள்
தடை தளர்வு
பச்சை மண்டலங்களில் பொருளாதார நடவடிக்கைகள்.
மாநிலங்களுக்குள் பேருந்து இயக்கம் (எந்தெந்த மாவட்டங்கள் என்பதை மாநில அரசுகள் முடிவு செய்யும்)
திருமண விழாக்களில் அதிகபட்சம் 50 பேர்
இறுதி சடங்கில் 20 பேர்
சலூன்கள், அழகு நிலையங்கள் (மாநில அரசுகள் அனுமதி அளித்தால் மட்டும்).
நிறுவனங்கள் இயன்ற அளவு பணியாளர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும்.