பீஜிங்: இந்திய சீனா எல்லை லடாக் பகுதியில் நிகழும் சர்வதேச நெருக்கடி குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கும் ஊடகங்களுக்கு தந்த உரை மற்றும் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளரின் உரை இருந்த பக்கங்களை சீன இணையதளமான வெய்போ இருந்து நீக்கப்பட்டுள்ளதாக இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
முன்னதாக பிரதமர் மோடி கடந்த 2015 ம் ஆண்டு சீனாவிற்கு பயணம் மேற்கொண்டிருந்த போது அந்நாட்டு மக்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள வெய்போ என்கிற இனைய சேவையில் கணக்கை துவக்கி இருந்தார். வெய்போ என்பது டுவிட்டர் போன்று சீனர்களால் துவங்கப்பட்ட இனைய சேவை.
எல்லையில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவத்திற்கு இடையில் ஏற்பட்ட மோதலில் கர்னல் உட்பட 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதனை குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி
இந்தியா என்றும் அமைதியை விரும்பும், ஆனால் தூண்டப்பட்டால் தகுந்த பதிலைக் கொடுக்கும் திறன் கொண்டது என்று கூறி இருந்தார். பிரதமரின் இந்த உரையை வெய்போ தனது பக்கத்தில் இருந்து நீக்கி உள்ளது.