சிறுத்தையைக் கொன்று உடல் ஊர்வலம் - 7 பேர் கைது


சிறுத்தையைக் கொன்று உடலை ஊர்வலம் - 7 பேர் கைது

அசாம் :

அசாம் மாநிலத்தில் அவ்வப்போது சிறுத்தைகள் கொல்லப்படுவது வழக்கமாகி வரும் நிலையில் கடந்த தினம் சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்தது  சிறுத்தையை மக்கள் அடித்துக் கொன்றுள்ளனர். இது இந்த வருடத்தில் கொல்லப்பட்ட 5வது சிறுத்தை என்பது குறிப்பிடத்தக்கது.

அசாம் மாநிலம் கடப்பாரியைச் சேர்ந்த மக்கள் அங்கு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தையைக் வனத்துறையினருக்கு தகவல் சொல்லாமல் பொறி வைத்து பிடித்து, கொன்று பின் இறந்த சிறுத்தையின் சடலத்தை ஊர் முழுக்க ஊர்வலமாகக் கொண்டு சென்று வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபடும் சில வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வனத்துறை அதிகாரி

இந்த பகுதி வானத்தை ஆக்கிரமித்து குடியிருப்பு இடமாக மாற்றப்பட்ட இடம் இங்கு அவ்வப்போது இது இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கும். பொதுமக்கள் தாமாக பல இடங்களில் பொறிகளை அமைத்து, நாங்கள் தகவல் கிடைத்ததும் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்தோம். ஆனால் அதற்க்குள் சிக்கிய சிறுத்தை அங்குள்ள மக்கள் அதனைக் கொன்றுவிட்டனர். அதுமட்டுமின்றி சிறுத்தையில் தோல், பல்,நகங்களை தனித்தனியாக பிய்த்து எடுத்துவிட்டனர் எனத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 7 பேரை வனத்துறை கைது செய்துள்ளது.

கடப்பாரி பகுதி மக்கள்

இந்தச் சிறுத்தை சில நாட்களாக குடியிருப்பு பகுதிக்குள் வந்து அச்சமூட்டி வந்ததாகவும், கோழி, ஆடுகளை அது வேட்டையாடியதாகவும் தெரிவித்துள்ளனர்.
Advertising
Advertising


தமிழ்நாடு செய்திகள்












இந்திய செய்திகள்


அரசியல் செய்திகள்


விளையாட்டு செய்திகள்




வேலைவாய்ப்பு செய்திகள்







OUR ANDROID APP DETAILS

Copyright © 2021 Nixs News தமிழ்