Embed This News
மும்பை: கொரோனா காலத்தில் ஊரடங்கு கெடுபிடியால் தவித்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி செய்து வருகிறார் பாலிவுட் நடிகர் சோனு சூட், இதுகுறித்து ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் இவருக்கு பாராட்டு மலை பொழிந்த வண்ணம் இருக்கின்றனர். இந்நிலையில் விரைவில் நடிகர் சோனு சூட் பிரதமர் மோடியை சந்தித்து, மும்பையின் முக்கிய மேலாளராக ஆவாரென சிவசேனா கட்சி விமர்சித்துள்ளது.
'சாம்னா' இது சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடு, இதில் அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எழுதியுள்ள கட்டுரையில், லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களை தங்கள் சொந்த மாநிலங்களுக்கு கொண்டு சென்றுள்ள நடிகர் சோனு சூட் புதிய மகாத்மா எனவும், அவரது பணிக்காக மஹாராஷ்டிரா கவர்னர், சோனு சூட்டை பாராட்டியுள்ளார். இது மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதை காட்டுவதாக அமைந்துள்ளது.
மேலும் ஊரடங்கு சமயத்தில் ஒருவருக்கும் பொது/தனியார் வாகனம் கிடைக்காத இந்த நேரத்தில், சோனு சூட்டிற்கு மட்டும் எப்படி அவ்வளவு பஸ்கள் கிடைத்தன ?.புலம்பெயர் தொழிலாளர்களை மாநில அரசு அனுமதிக்காமல் இருந்திருந்தால், மக்கள் எங்கே சென்று இருப்பார்கள் என அவருடைய மீட்பு நடவடிக்கைகள் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த மாதம் 31ம் தேதி மஹாராஷ்டிரா கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து, புலம்பெயர் தொழிலாளர்களை தனது சொந்த செலவில் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைப்பது குறித்து சோனு சூட் ஆலோசனை நடத்தினார். சோனு சூட்டின் இந்த முயற்சிக்கு பாராட்டு தெரிவித்த கவர்னர், அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு அளிப்பதாக கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து மும்பையில் சிக்கிஇருந்த 200 மேற்பட்ட தமிழகத்தை சேர்ந்த வியாபாரிகாலை பஸ் மூலம் சோனு சூட் அனுப்பி வைத்தார். அப்போது தமிழர்கள் ஆரத்தி எடுத்து நன்றி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.