அமெரிக்க :
அமெரிக்க - கனடா எல்லைப்பகுதியில் வானில் இரண்டு சூரியன்கள் இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகியது, இந்த இரு சூரிய புகைப்படம் சமூகவலைதளங்களில் ஹண்டர் மூன் என்ற பெயரில் வெளியாகி வைரலானது. ஆனால் அது போலியானது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்றய தினம் வலய சூரியகிரகணம் தோன்றியது இந்த சூரிய கிரகணத்தையும் மாயன் காலண்டரையும் குறித்து பல வதந்திகளும் வந்து சேர்ந்தது..
இந்நிலையில் டுவிட்டரில், அமெரிக்க - கனடா எல்லைப்பகுதியில் மாலைவேளை வானில் இரண்டு சூரியன்கள் இருப்பது போன்ற பல புகைப்படங்களும் அடுத்தடுத்து பரவியது.
இது ஒரு மாய தோற்றம் எனவும், பூமியின் அச்சு ஆறு மாதத்திற்கு ஒருமுறை மாறும் போது சூரிய கிரகணம் நிகந்தால், சூரியனின் ஒளியால் சந்திரன் இது போன்று தோற்றமளிக்குமெனவும், இது மூன் ஹண்டர்ஸ் எனவும் கூறப்பட்டிருந்தது.