டெல்லி:
கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்து விளம்பரம் மேற்கொண்ட பாபா ராம்தேவ் மீது கிரிமினல் வழக்கு போட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பீகார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க பல மில்லியன் டாலர் முதலீடு செய்து ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கின்றன... இந்தவேளையில்
மந்தநிலை:
கொரோனா தொற்றிற்கான மருந்தை கண்டுபிடிப்பதில் பெரும் சிரமம் கண்டுவருகின்றனர்... இதற்கான காரணம் வைரசின் மரபணு தான்... ஆரம்பத்த்தில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸுக்கும் ஐரோப்பிய நாடுகளில் கண்டுபிடித்த கொரோனா வைரஸுக்குமான பெரும் மரபணு வேறுபாடு இருக்கிறது; இது கொரோனா மருந்து கண்டுபிடிப்பில் மிகப் பெரும் மந்தநிலையை கொண்டுவருகிறது... இருக்கிறது மருத்துவ உலகம் முழுதும் செல்ப் முடேஷன் என்பர்.
ராம்தேவின் கொரோனா மருந்து
இப்படிப்பட்ட இக்கட்டான நிலையில் திடீரென பாபா ராமதேவ் தன்னிடம் கொரோனாவை 15 நாட்களில் 100% குணப்படுத்தும் மருந்து இருப்பதாகவும், கொரோனா வைரஸ் தடுப்புமருந்தை நாங்களே முதலில் கண்டுபிடித்தோம் என்றும் இதன் விலை வெறும் ரூ545 தான்.. இதனை சாப்பிட்டால் கொரோனா முற்றிலும் இல்லாமல் போய்விடும் என்று யோகா வகுப்பு நடத்தும் ராம்தேவ் அறிவித்தார். இது இந்தியா முழுதும் மிகப் பெரும் சர்ச்சை ஏற்ப்படுத்தியது.
மத்திய அரசு தடை
பாபா ராமதேவ் செய்யும் எல்லாவற்றிற்கும் ஆதரவு அளித்த மத்திய அரசுதான் தற்போது முதலில் செக் வைத்தது. ராம்தேவ், கொரோனா மருந்து தொடர்பான விளம்பரங்கள், பொருட்கள் சந்தைப்படுத்த தடை விதித்தது மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும் இது தொடர்பான விவரங்களை மத்திய அரசிடம் சமர்பிக்கவேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.
காய்ச்சல் மருந்துதான்
அத்துடன் நிறுத்திக்கொல்லாமல் உத்தரகாண்ட் மாநில அரசு ராம்தேவ் செய்த பொய் விளம்பரங்களை அம்பலப்படுத்தியது. பாபா ராம்தேவ் தன்னுடைய தயாரிப்பு சளி, காய்ச்சல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்துதான் என உண்மையை கூறி லைசென்ஸ் வாங்கியதை பகிரங்கமாக போட்டுடைத்தது. இதன்முலம் பாபா ராமதேவ் செய்த காரியம் அம்பலமானது.
பீகார் கோர்ட்டில் வழக்கு
இதேபோல் பீகாரில் ராம்தேவ் அவரது கம்பெனி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கோரி முசாபர்நகர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டிருக்கிறது.