சென்னை: கொரோனாவால் நாட்டின் முக்கிய புள்ளிகளும் பாதிக்கப்பட்டு இருக்கும் இந்த நிலையில் திமுகவின் முன்னாள் வடசென்னை மாவட்ட செயலாளர் பலராமன் கொரோனா தோற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் இன்று உயிரிழந்ததாக கனிமொழி எம்.பி தமது இரங்கல் செய்தியை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
கனிமொழியின் இரங்கல்:
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திமுக முன்னாள் வட சென்னை மாவட்டச் செயலாளர் அண்ணன் பலராமன் உயிரிழந்தார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. கழகத்தின் மூத்த முன்னோடியான அவரது மறைவு, மிகப்பெரிய இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
இவ்வாறு கனிமொழி தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திமுக முன்னாள் வட சென்னை மாவட்டச் செயலாளர் அண்ணன் பலராமன் உயிரிழந்தார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. கழகத்தின் மூத்த முன்னோடியான அவரது மறைவு, மிகப்பெரிய இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். pic.twitter.com/ovKZJIp0xN
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) June 21, 2020