மும்பை:
கடந்த தலைமுறையின் இந்திய அணியில் சிறந்த வேகப் பந்துவீச்சாளராக அனைவரின் மனதிலும் நம்பிக்கை அளித்தவர் இர்பான் பதான். சிறந்த ஆல் - ரவுண்டராக அணியின் முக்கிய பொறுப்பில் வருவார் என அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
இருந்தும் அவருக்கு அணியில் அணியில் தொடர்ந்து படிப்படியாக வாய்ப்பு கிடைக்காமல் போனது. இந்த சம்பவம் இன்று வரை விவாதத்திற்கு உரிய பங்கை வகிக்கிறது.
பதானின் பேச்சு
பதான் 19 வயதில் இந்திய அணியில் இடம் பெற்றார். அண்டர் 19 உலகக்கோப்பை தொடரில் ஒரே போட்டியில் 9 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தி இருந்தார். அவரது கடைசி போட்டியிலும் அவர் 5 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார் அப்போது அவருக்கு வயது 27. இந்த நிலையில், தனக்கு ஏன் அணியில் இடம் மறுக்கப்பட்டது என்பது பற்றி மனம்திறந்துள்ளார் இர்பான் பதான்.
சாதனை
மிகக்குறைந்த ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்களை வீழ்த்தி, இந்திய அளவில் அதிவேகமாக ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்களை வீழ்த்திய இளம் பந்துவீச்சாளர் என்ற சாதனையை செய்தார். அப்போதுவரை பதானுக்கு ஒபெநிங் பந்துவீச்சை கொடுத்த இந்திய அணி பின் மத்திய ஓவர்களில் பந்து வீச வைக்கப்பட்டார்.
கடைசி போட்டி
"தன்னால் இந்தியா அணியின் மிகச் சிறந்த ஆல்-ரவுண்டராக வலம்வந்திருக்க முடியும். ஆனால், அது நடக்கவில்லை. நான் அதிக கிரிக்கெட் ஆடவில்லை எனது கடைசி போட்டியை 27 வயதிலேயே ஆடி விட்டேன். வாய்ப்பு கொடுத்து இருந்தால் என்னால் 35 வயதுவரை ஆடி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க முடியும்" என்றார்.