வாஷிங்டன்:
அமெரிக்கா நாட்டில் பணிபுரிந்து, நிரந்தர குடியுரிமை கோரும் லட்சக்கணக்கான அந்நிய நாட்டவருக்கு, 'கிரீன் கார்டு' வழங்குவதை அமெரிக்கா இந்த ஆண்டு இறுதிவரை நிறுத்தி வைத்துள்ளது என்று அந்நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். 'அந்நாட்டில் தற்போது வேலையின்மை மற்றும் பொருளாதார நெருக்கடி இருக்கிறது என்றும் இதனை சமாளிக்கவே தற்போதுள்ள வேலைகளை அமெரிக்கர்களுக்கே கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவினை எடுத்துள்ளதாக', அவர் கூறியுள்ளார்.
கொரோன பாதிப்பால் உலகில் கிட்டத்தட்ட அனைத்து நாட்டின் பொருளாதாரமும் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது... இதனால் பல நிறுவனங்களில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கமுடியாமல் வேலையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்... இதேபோன்ற நிலைதான் அமெரிக்காவிலும்.., அமெரிக்காவில் இந்த நிலையில் பல அமெரிக்கர்கள் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர்... இதனால் அமெரிக்காவில் பணிபுரிந்து அங்கேயே நிரந்தர குடியுரிமைக்காக, 'கிரீன் கார்டு' எனப்படும் குடியுரிமை அத்தாட்சியை, 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக, அதிபர் ஏப்ரலில் அறிவித்தார்.
இதுஒருபுரம் இருக்க வெளிநாட்டிலிருந்து அமெரிக்கா வந்து குடியுரிமை இல்லாத வேலைக்கான எச்1பி விசா உள்ளிட்ட வேலைக்கான விசாக்கள் வழங்கப்படமாட்டாது என்று டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார். டிரம்ப்யின் இந்த முடிவுக்கு எம்.பி.,க்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துஉள்ளனர்.
Tamil News