வழக்கறிஞர் உத்தமகுமரன் இப்போ கூடை பின்னும் தொழிலாளி! - லாக்டெளனால் கொடுமை
வக்கீல் தொழிலில் வரும் வருமானத்தின் மூலம் தன் குடும்பத்தை நடத்தி வந்ததுடன் தன் பகுதியில் வசிக்கும் தன் இனமக்களுக்கு சின்னச் சின்ன உதவிகளையும் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக லாக்டெளன் பிறப்பிக்கப்பட்டதால் தனது வக்கீல் தொழிலும் முற்றிலுமாக முடங்கியது. வருமானம் இல்லாமல் போனதால் கொஞ்ச நாள்களிலேயே கையில் இருந்த பணமும் தீர்ந்துவிட்டது.
வழக்கறிஞர் உத்தமகுமரன்:
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வழக்கறிஞர் உத்தமகுமரன், இவர் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர் மனைவி, மகனுடன் ஒரு சிறிய குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். பழங்குடியினர் என்றபோதிலும் படிப்பறிவே அறியாத தனது மக்களின் சார்பாக படிக்கவேண்டும், படிப்பு ஒன்றே தன்னையும் தன்னை சார்ந்த மக்களையும் உயர்த்தும் என்று எதிர்வந்த பல்வேறு சிரமங்களை கடந்து முனைப்புடன் படித்து வழக்கறிஞர் பட்டம் பெற்றார். தற்போது வழக்கறிஞராகவும் பணியாற்றி வருகிறார்.வழக்கறிஞர் உத்தமகுமரன் செயல்கள்
நேர்மையுடன் தான்புரியும் வக்கீல் தொழிலில் வரும் வருமானத்தின் மூலம் தன் குடும்ப தேவைகளையும் தனது பகுதி மக்களுக்கு தேவையான, தன்னால் இயன்ற சின்னச் சின்ன உதவிகளையும் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கொரோனா பரவலைத் தடுக்க நாடுமுழுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் தனது வாழ்வாதாரமான வக்கீல் தொழிலும் முற்றிலுமாக முடங்கியது. இருந்த காசு முற்றிலும் தீர்ந்துபோனது.வக்கீல் தொழிலில் வரும் வருமானத்தின் மூலம் தன் குடும்பத்தை நடத்தி வந்ததுடன் தன் பகுதியில் வசிக்கும் தன் இனமக்களுக்கு சின்னச் சின்ன உதவிகளையும் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக லாக்டெளன் பிறப்பிக்கப்பட்டதால் தனது வக்கீல் தொழிலும் முற்றிலுமாக முடங்கியது. வருமானம் இல்லாமல் போனதால் கொஞ்ச நாள்களிலேயே கையில் இருந்த பணமும் தீர்ந்துவிட்டது.