லண்டன்:
பிரிட்டனில், சென்டர் ஃபார் ஆல்ட் டெக் சார்பாக 'ஜீரோ கார்பன்' என்னும் சுற்றுச்சூழல் திட்ட செயல்பாட்டுக்கு சிறந்த பங்கேற்பாளர்களுக்கான மற்றும் சிறப்பு செயல்பாட்டிற்கான விருதுகளின் பட்டியல் வெளியாகியது இதில் உலகம் முழுவதிலும் இருந்து 50 பெண் இன்ஜினியர்கள் பட்டியலில் வெளியிடப்பட்டது, அதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த, ஐந்து பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.
பிரிட்டனில், சென்டர் ஃபார் ஆல்ட் டெக் சார்பாக 'ஜீரோ கார்பன்' என்னும் சுற்றுச்சூழல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது இதன் நோக்கம் 2030ம் ஆண்டிற்குள் உலகம் முழுவதும் கார்பன் இல்லாத மாற்று ஆற்றல் உருவாக்கம் ஆகும்...
இந்த கொரோனா நேரத்திலும் கூட இவர்கள் அயராது இதற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர் இதில் 2020ஆண்டில், சிறந்த பங்கேற்பாளர்களுக்கான மற்றும் சிறப்பு செயல்பாட்டிற்கான விருது பெறும், 50 பெண் இன்ஜினியர்களின் பட்டியல், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.'ஜீரோ கார்பன்' திட்டத்தில், குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியோர் மட்டும் சிறந்த மாற்று ஆற்றலுக்கான பங்களிப்பை பொறுத்து, இந்த விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.
சித்ரா சீனிவாசன் - பிரிட்டன் அணுசக்தி ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, குல்ஹாம் அறிவியல் மையத்தின் இன்ஜினியராக உள்ளார்
ரிது கார்க் - போக்குவரத்து பிரிவு
பர்னாலி கோஷ் - நில அதிர்வு துறை
அனுஷா ஷா - காலநிலை மாற்ற நிபுணர்
குசும் திரிகா - மூத்த இன்ஜினியர்
இந்த ஐந்து இந்திய வம்சாவளியினர் இந்த விருதுகளை பெரும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
Tamil News