அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் சுமார் 54 லட்சம் பேர் உடமைகளை இழந்து பாதிப்பு அடைந்துள்ளனர். பெருக்கெடுத்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 76 பேர் பலியாகி உள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளது..
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அசாம் மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக பெய்துவரும் தென்மேற்குப் பருவமழை அங்குள்ள பலரின் வாழ்வாதாரம் மொத்தத்தையும் சூறையாடியுள்ளது. காட்டுப்பகுதியில் இருந்த வனவிலங்குகள் உட்பட தங்கள் இருப்பிடம் விட்டு வெளியேறும் நிலையில் தள்ளப்பட்டுள்ளனர்..
காரணம்
தொடரும் தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால் கனமழை பெய்து பிரம்மபுத்திரா ஆற்றிலும் அதன் துணையாறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்படி செய்துள்ளது. இதன் காரணமாக மாநிலத்திலுள்ள 30 மாவட்டங்களில்லும் சுமார் 54 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் மேலும் இதுவரை வெள்ளத்தில் சிக்கி 76 பேர் உயிரிழந்துள்ளனர்.
தாழ்வான பகுதிகளில் வசித்துவந்த சுமார் 76 ஆயிரம் பேர் தங்கள் உடமைகளை கூட அங்கேயே விட்டுவிட்டு வெளியேற்றப்பட்டு 552 தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.