மேற்குவங்க பாஜக தலைவர் திலீப் கோஷ், சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தனிமனித நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பசுமாட்டின் கோமியத்தை குடிக்கவேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்..
திலீப் கோஷ், கடந்த ஆண்டு இதேபோல் பசுவின் பாலில் தங்கம் இருப்பதாக கூறிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். அவர் தற்போது கொரோனாவிலிருந்து விடுபட பசு கோமியம் குடிக்கவேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவிலிருந்து உலகம் முழுவது பரவி, தற்போது இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 10 லட்சத்தை தாண்டி உள்ளது. இந்த நோயிக்கு தடுப்புமருந்து கண்டறிய உலக நாடுகளே தடுமாறிக்கொண்டிருக்கும் இந்த நிலையில் திலீப் கோஷ் இந்த நோயை கட்டுப்படுத்தவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கவும் பசுவின் கோமியத்தை குடித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அறிவுறுத்தி உள்ளார்.
மேற்குவங்க மாநிலம் துர்காபூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட திலீப் கோஷ் கூறி இருப்பதாவது: நாடு மக்கள் கொரோனா வைரசால் மிகவும் அவதிப்படுகிறார்கள். இது பகவான் கிருஷ்ணரின் நிலம், இங்கே மாடுகள் நம் கடவுள், நாம் வணங்குகிறோம். ஆரோக்கியமாக இருக்க பசு கோமியம் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அது நமக்கு கொடுக்கும்" என்றார்