லக்னோ: ராஜஸ்தான் மாநிலத்தின் அரசியலில் கடந்த சில மாதங்களாக நிலவும் உறுதியற்ற தன்மை காரணமாக ஜனாதிபதி ஆட்சியை அமைப்படுத்த கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா பரிந்துரைக்க வேண்டும் என மாயாவதி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் அங்கு ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவால் அங்கு அரசியல் உறுதியற்ற தன்மை நிலவுகிறது. ஆளும் கட்சியிலிருந்த துணை முதல்வர் சச்சின் பைலட், முதல்வர் அசோக் கெலாட்டை ஆகியோரை மாற்றி வேறு ஆட்களை அமர்த்த கோரி பதினெட்டு அதிருப்தி MLA க்கள் பிரிந்துசென்றுள்ளனர்.
பெரும்பான்மையை நிரூபிக்க சுயேட்சைகள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினரை தனக்கு ஆதரவாக மாற்றியுள்ளார்.
இது மாயாவதிக்கு கடும் கோவத்தை ஏற்படுத்தியுள்ளது.. எனவே அவர் ராஜஸ்தானில் நிலவும் அரசியல் மந்தநிலை மற்றும் உறுதியற்ற தன்மையை கவனத்தில் கொண்டு ஜனாதிபதி ஆட்சியை பரிந்துரைக்குமாறு கவர்னரை வலியுறுத்தியுள்ளார்.