கரோனா நோய்த் தொற்றால் இறந்ததாக சந்தேகம்.., உதவி கிடைக்கவில்லை...
இறந்தவரின் உடல் தள்ளுவண்டியில் எடுத்துச் சென்ற அவலம் நிகழ்ந்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெலகாவியில் உயிரிழந்த நபர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியிருக்கலாம் என்று கூறி அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர் யாரும் உதவ வராத நிலையில் இறந்த அந்த நபரின் குடும்பத்தினரே இறந்த உடலுக்கு இறுதி மரியாதை செய்ய தள்ளுவண்டியில் வைத்து அவரது உடலைக் கொண்டு சென்ற அவலம் நிகழ்ந்துள்ளது.
55 வயதான சதாஷிவ் ஹிராட்டி புதன்கிழமை இரவு அவரது குடும்பத்தினருடன் அருகில் உள்ள சிக்காட்டிக்கு உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தனர். அங்கு இரவு தூக்கத்திலேயே மாரடைப்பு காரணமாக தனி அறையில் சதாஷிவ் ஹிராட்டி தங்கி இருந்தார். இந்நிலையில் காலையில், அவரை எழுப்புவதற்காக சென்றபோது அவர் இறந்துகிடப்பது தெரியவந்துள்ளது, நாற்காலியில் சதாஷிவ் ஹிராட்டி இறந்து கிடந்தார். இறந்த கணவனின் உடலை தள்ளுவண்டி உதவியுடன் மனைவி, மகன் தகனம் செய்யும் இடம் வரை கொண்டு சென்றனர்.
ஒருவேளை கொரோனா காரணமாக இறந்திருக்கலாம் என்று உறவினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் உதவிக்கு வரவில்லை.
இத்தனை நாள் பழகிய ஒருவர் கூட உதவிக்கு வரவில்லை... மிகவும் வேதனையாக இருக்கிறது என்று குடும்பத்தினர் வருத்தம் தெரிவித்தனர்..
#WATCH Karnataka: Body of a man was carried on a cart by his family, for last rites, in Belagavi's Athani Taluk after they allegedly received no help from anyone. They allegedly received no help from others following a suspicion that the deceased was COVID-19 positive. (17.07) pic.twitter.com/eRkeBDSB4v
— ANI (@ANI) July 18, 2020
இறந்த அந்த நபரை மூட்டையாக கட்டி குடும்பத்தினர் தள்ளுவண்டியில் எடுத்துச்சென்ற இந்த விடியோவை இணையத்தில் வைரலாக பகிரப்பட்டுவருகிறது..