சென்னை; தமிழ்நாட்டில் கொரோனா தோற்று கட்டுப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் யாவும் பலனளிக்காமல் கைமீறி போனதும், தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இம்மாதத்தின் ஒவ்வொரு ஞாயிறும் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.
மார்ச் மாதம் 25ம் தேதி முதல் பல்வேறு கட்டங்களாக நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது அதன்மூலம் கொரோனா வைரஸ் தோற்று கட்டுப்படுத்தமுடியும் என்று எதிர்பார்த்த நிலையில் அரசின் முயற்சிகள் பெரிதாக பலனளிக்கவில்லை. மீண்டும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருந்தது.
கொரோனா பரவலின் தாக்கம் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட தரவுகளை பொறுத்து ஒவ்வொரு மாநிலங்களிலும் அதற்கேற்றபடி தளர்வுகளுடன் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் தற்போது தமிழகத்திலும் இந்தமாதம் முழுதும் ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது...
அதன்படி, இன்று ,ஜூலை 19, தமிழகம் முழுதும், எவ்வித பாகுபாடும் இன்றி, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இன்று, அனைத்து வணிகவளாகங்களும், கடைகளும் மூடப்பட்டிருக்கும். வாகனங்கள் இயங்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வெளியில் வராமல், வீடுகளிலே தங்கியிருந்து, கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என தமிழக அரசு சார்பாகவும், சுகாதாரத்துறை சார்பாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.