E-pass பெறுவது மிகவும் எளிது - சென்னை மாநகராட்சி கமிஷனர்
சென்னை : ''இப்போது 'இ - பாஸ்' பெறுவதும் அதற்கான நடைமுறைகளும் மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது. இடைத்தரகர்கள் இல்லாமல் வெறும் ஆதார் எண்ணை அளித்து, இ - பாஸ் பெற்றுக் கொள்ளலாம்.'' என, மாநகராட்சி கமிஷனர் திரு பிரகாஷ் கூறினார்.
நேற்று அயனாவரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், கொரோனா பரவலை தடுக்க, தொடர்ந்து பல நடவடிக்கைகள் திறம்பட எடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை, 1, 07,109 பேருக்கு, தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 87.5 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். மாநகராட்சியில் இறப்பு விகிதம், 2.1 சதவீதமாக உள்ளது. அதை, 1.5 சதவீதமாக குறைக்க இலக்கு நிர்ணயித்து வேலைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. என்றும்
'இ - பாஸ்' பெறுவதை எளிமைப்படுத்தி உள்ளோம் என்றும், இணையம் வாயிலாக திருமணம்/ இறப்பு/தொழில் ரீதியாக, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வந்து செல்ல, வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் போதிய ஆவணங்கள் சமர்ப்பிக்காமல் விண்ணப்பித்தால், தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க குறுஞ்செய்தி வாயிலாக அறிவுறுத்தும் நடவடிக்கையும் எடுத்துள்ளோம் என்றும், கூறினார்,