தமிழ்நாடு: மேற்கு தொடர்ச்சி மலைகளில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் கர்நாடகா அணைகளிலிருந்து தமிழகத்திருந்து, 1.50 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளதால், தொடர்ந்து, 3ம் ஆண்டாக, மேட்டூர் அணை நிரம்பும் என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியில் எழுந்துள்ளது.
மேட்டூர் அணை:
மொத்த நீர்மட்டம், 120 அடி;
கொள்ளளவு, 93.47 டி.எம்.சி.
கர்நாடகா முழுதும் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கபினி அணையின் நீர்வரத்து 70 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து உபரி நீர் முழுமையாக, காவிரியாற்றில் வெளியேற்றப்படும். நுகு அணையில் இருந்து, காவிரியில், 6,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இந்த உபரிநீர் இன்று இரவு மேட்டூர் அணையை வந்தடையும். இதனால், ஓரிரு நாட்களில், மேட்டூர் அணை நிரம்பும்.