7 தமிழர் விடுதலை - ஆளுநர் செய்வது அதிகார அத்துமீறல்- மு.க.ஸ்டாலின்
ராஜீவ் காந்தி படுகொலை சம்பந்தமாக 20 ஆண்டுகளுக்கும் மேல் சிபிஐ-ன் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் நடத்திவந்த விசாரணைக்கும் இந்த கொலை வழக்கில் இந்தனை ஆண்டுகளாக தண்டனையை அனுபவித்து வரும் 7 தமிழருக்கும் எந்த தொடர்புமே இல்லை என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் 7 பேரின் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் வரையறையின்றிக் காலம் தாழ்த்துவது மனித நேயமற்ற அதிகார அத்துமீறல் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளதாவது:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் எழுவர் விடுதலை குறித்து ஆளுநர் காலம் தாழ்த்துவது மனித நேயமற்ற அதிகார அத்துமீறல் #29YearsEnoughGovernor!
பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலையில் ஆளுநர் விரைந்து எடுக்க வேண்டும்; @CMOTamilNadu வேடிக்கை பார்த்திராமல் வலியுறுத்த வேண்டும்.
ஆளுநரின் இந்த செயல்பாட்டை கண்டித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்திருக்கிறார்கள். இதன் பிறகாவது, பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலைக்குரிய முடிவினை ஆளுநர் விரைந்து எடுக்க வேண்டும்.
இதேபோல் திமுக எம்பி கனிமொழியும் மு.க.ஸ்டாலின் ட்விட்டை மேற்கொள் காட்டி ஆளுநர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.