அமைச்சர் துரைக்கண்ணுவின் திடீர் மறைவு மனதிற்கு மிகவும் வேதனையை தருவதாக பிரதமர் மோடி இரங்கல்.
கடந்த ஆக்டொபர் மாதம் 13-ம் தேதியன்று சென்னையில் இருந்து சேலத்திற்கு சென்ற அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு செல்லும்வழியிலேயே நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் துரைக்கண்ணு அனுமதிக்கப்பட்டார்.
மேல்படி சிகிச்சைக்காக அடுத்தநாளே சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 11.15 மணிக்கு அமைச்சர் துரைக்கண்ணு காலமானார் என்று மருத்துவமனையிலிருந்து செய்தி வெளியாகியது. இதனையடுத்து தமிழ்நாடுமுழுதும் அரசியல் காட்சிகள் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து தஞ்சை மாவட்டம் ராஜகிரியில் உள்ள அவரது தோட்டத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் துரைக்கண்ணு மறைவு குறித்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, ''தமிழக அமைச்சர் துரைக்கண்ணு மரணம் மிகுந்த வேதனையை தருகிறது" என்றும் மேலும் "சமூக மற்றும் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கவும் குறிப்பிடத்தக்க வகையில் அமைச்சர் துரைக்கண்ணு முயற்சிகளை மேற்கொண்டார்" என்று அமைச்சர் துரைக்கண்ணுவை பற்றி பேசினார். "இந்த துயரமான நேரத்தில் துரைக்கண்ணுவின் குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்'' என அவர் தெரிவித்துள்ளார்.