நடிகர் ரஜினிகாந்தை அரசியல் வாழ்க்கைக்கு வருமாறும், கட்சியை ஆரம்பிக்கவும்கோரி நடிகர் ரஜினியின் போயஸ் கார்டன் வீடு முன்பாக ரசிகர்கள் கூடி
நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு வருமாறும், அரசியல் வெற்றிடத்தை பூர்த்தி செய்யவும் அவரது ரசிகர்கள் மற்றும் அரசியல் காட்சிகள் பல ஆண்டுகளாக அழைத்து வந்த நிலையில் தான் அரசியலுக்கு வருவதாக அவர் 2019-ஆம் ஆண்டு தெரிவித்தார். ஆனால் அரசியல் கட்சியை எப்போது தொடங்குவார் என்றும் தெரியவில்லை.
இப்படியே முடிவில்லாமல் நீண்டுகொண்டு இருந்த இந்த நிலையில் விஜயதசமி அன்று கட்சியை தொடங்குவார் என அறிவிப்புகள் வெளியான நிலையில் அது போன்ற எந்த நிகழ்வும் நடைபெறவில்லை. அண்மையில் ரஜினி எழுதியாக ஒரு அறிவிப்பு வெளியானது.
அந்த அறிவிப்பில் "தனக்கு உடல்நிலை சரியில்லாததால் அரசியலுக்கு வரும் முடிவை கைவிடுகிறேன் என இருந்தது".
இதனை கண்டு அவரின் ரசிகர்கள் அச்சிற்ச்சியில் உறைந்தனர். இந்த நிலையில் தனது பெயரில் உலா வரும் குறிப்பிட்ட அறிக்கை பொய்யானது என்றும், அதில் உள்ள தகவல்கள் உண்மையில்லை என்றும் மருத்துவம் சார்ந்த விஷயங்கள் மட்டுமே உண்மை என்றும் ரஜினிகாந்த் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்துள்ளார்.
ரஜினியின் இந்த ஒரு ட்விட் அறிக்கை ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தது இருந்தபோதிலும், அரசியலுக்கு வருவதற்காக "தலைவா நீங்க வந்தா மட்டும் போதும், மற்றதை எல்லாம் நாங்கள் பார்த்துகிறோம், மக்களிடம் நாங்கள் போய் ஓட்டு கேட்கிறோம்" என ரசிகர்கள் போயஸ் தோட்ட தெரு, அண்ணா அறிவாலயத்திற்கு எதிர்புறம் என போஸ்டர்களை ஒட்டியிருந்தனர்.