"எந்த நாட்டில் ரஜினிக்கு ஆதரவு இருக்கிறதோ அந்த நாட்டிலேயே அவர் கட்சி தொடங்கட்டும்" - சீமான் விமர்சனம்.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். "தைப் பூசத்திற்கும் தமிழ்நாடு உருவாகிய நாளைக்கும் தமிழக அரசு சார்பில் விடுமுறை அளிக்கப்படவேண்டும்" என்றும்.
ரஜினியை பற்றி கேள்வி எழுப்பியபோது "ரஜினிக்கு எந்த நாட்டில் ஆதரவு இருக்கிறதோ, அங்குச் சென்று அவரை கட்சி தொடங்க சொல்லுங்கள்" என்று விமர்சனம் செய்துள்ளார்
மேலும் "நாம்தமிழர் கட்சியும் தான் உலகம் முழுவதும் அலுவலகங்கள் உள்ளது. என் கட்சி இல்லாத நாடே இல்லை. அயோத்தியில் ராமர் வைத்து அரசியல் செய்தது போல, கேரளாவில் ஐயப்பனை அரசியல் செய்யலாம் என நினைத்தார்கள். ஆனால் பாஜகவின் இந்த எண்ணம் தோற்றுவிட்டது."