”கலைஞர்போல எவரும் இல்லை, ஒருவரும் இனி பிறக்க முடியாது” -மு.க. அழகிரி
மதுரை : மதுரை பாண்டிகோவில் அருகே இன்று மாலை 4 மணியளவில் நிகழ்த்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் மு. க. அழகிரி மற்றும் தமிழகம் முழுவதுமிலிருந்து அழகிரியின் ஆதரவாளர்கள் பங்கேற்றனர். கொரோனா காலம் என்பதால் சமூக இடைவெளியுடன் மிகவும் கவனமுடன் கூட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய மு.க. அழகிரி கூறும்போது, “எத்தனையோ திமுக தோழர்களை தமிழகத்தில் அமைச்சர் ஆக்கினேன். இருப்பினும் ஒருவருக்கு கூட நன்றி என்பது சற்றும் இல்லை. அப்படிப்பட்டவர்கள் இன்று கலைஞரை இப்போது உள்ள ஸ்டாலினுடன் ஒப்பிடுகின்றனர். அதை சகிக்க முடியவில்லை இதனை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. கலைஞருக்கு இருக்கின்ற அறிவு, ஆளுமை இந்த உலகில் யாருக்கும் கிடையாது.
அவரின் பேச்சு, கலை, எழுத்து, இலக்கியம், தமிழ் உணர்வு யாருக்கு இருக்கு? கலைஞர்போல எவரும் இல்லை, ஒருவரும் இனி பிறக்க முடியாது. ஆனால் அவர்கள் இன்று கலைஞரை மறந்து விடடு கட்சியை நடத்தும் ஸ்டாலினுடன் இருக்கின்றனர் . ஆகையால் கலைஞரை மீண்டும் ஞாபகப்படுத்த வேண்டும். கலைஞர்தான் நமது உயிர் மூச்சு” என்றும்.
"மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக ஒருபோதும் ஆக முடியாது; கலைஞரின் உண்மையான ஆதரவாளர்கள் மு.க.ஸ்டாலினை முதல்வராக்கவும் விடமாட்டார்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி ஆவேசமாக கூறினார்."