ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை

ஈரோடு மாவட்டம் அருகே புஞ்சைபுளியம்பட்டி கே.வி.கே அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 மாணவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால்,  அங்கு தற்காலிக விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.



நாடு முழுதும் கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன. இதனால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைய தொடங்கியதன் காரணமாக  கடந்த 1ஆம் தேதி (செப்டம்பர் 1ஆம் தேதி) முதல் 9 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகள் உடன் பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.


புஞ்சைபுளியம்பட்டி காந்தி நகரை சேர்ந்த 40 வயது பெண்ணுக்கு தொடர் காய்ச்சல் பாதிப்பு இருந்ததால், சிகிச்சை பெற்றுவந்ததால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பெண்ணின் 16 வயது மகன் புஞ்சைபுளியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். மேலும் கடந்த 1 ஆம் தேதி மட்டும் பள்ளிக்கு சென்றிருக்கிறார்.


அந்த மாணவனுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அந்த மாணவனுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. மாணவனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் அந்த வகுப்பறையில் உள்ள 27 மாணவர்களுக்கும், 42 ஆசிரியர்களுக்கும் பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. மேலும் அந்தப் பள்ளிக்கு தற்காலிகமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட சில நாட்களில் இதுபோன்ற சம்பவங்கள் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மாணவர்கள் ஆசிரியர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Advertising
Advertising


தமிழ்நாடு செய்திகள்












இந்திய செய்திகள்


அரசியல் செய்திகள்


விளையாட்டு செய்திகள்




வேலைவாய்ப்பு செய்திகள்







OUR ANDROID APP DETAILS

Copyright © 2021 Nixs News தமிழ்